என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறைந்த மதிப்பெண்"
ஜோலார்பேட்டை:
பெங்களூர் மாநிலம் மனோரஞ்சிதபாலையா பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மகள் சித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சித்ரா தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ரெயில் ஏறி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.
ரெயிலில் இருந்து இறங்கிய அவர் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சிறுமியை வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.
சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). இவர் ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு எழுதியதில் மதிப்பெண் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.
அதை ஏற்காத அவர் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் கடந்த முறையை விட இப்போது குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.
இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். கோட்டீஸ்வரி மாயமான போது தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் ஏறி எங்காவது சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன்படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பீகாருக்கு சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த கோட்டீஸ்வரியை மீட்டனர்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்